வேர்கள் கதை பேசும்
பள்ளி செல்கையில்
உனைப் பார்த்த ஞாபகம்
சாலையோர
வளாகத்தில் கிளைபரப்பி
கம்பீரமாய் நின்றிருந்தாய்
சிறு விதைதனை
கருவாய் கொண்டு
பல வருட
உழைப்பினிலே
செழித்து தளைத்திருந்தாய்
இயற்கையை நேசித்து
உனை விதைத்த
அந்த முகந்தெரியா நபருக்கு
இருகரம் கூப்பி
நன்றியுரைத்திடவே விரும்புகின்றேன்
செயற்கைத்தனம் குடியேறிவிட்ட
குடியிருப்புகளில்
சிறகடித்துப் பறக்கும்
பல வண்ணப் பட்சிகளுக்கும்
நீ தான் அடைக்கலம்
பொருள் ஈட்டும்
பரபரப்பிலும் கூட
சில நாழிகைகளை, உன்
நிழலில் சுகமாய் கழித்திடுவோரை
நான் பார்த்ததுண்டு
பள்ளிவிட்டு வரும் பொடிசுகள்
கல் கொண்டு வீழ்த்தும்
உன் கனிகள்
இதமாய் பசியாற்றும்
சுவை மிகு அமுதங்கள்
பிடித்தவர்கள் பெயர்தனை
உன் தண்டில்
பதித்திடும் இளமையை
கிராமத்தில் மட்டுமல்ல
நகரத்திலும் காண்கின்றேன்
என் சாலையோர
நண்பனாகிவிட்ட நீ,
காலம் போன போக்கில்
அடிபட்டுப் போனதுதான்
என் துரதிஷ்டம்
ஆம், ஊரெங்கும் வியாபித்த
மனிதனின் நாகரிகப்
படைப்புகள்
இயற்கையினை பட்டும்படாமல்
தோற்கடித்தன
இயற்கை மரித்துப் போய்
செயற்கை காலூன்றிவிட
உன் போன்ற விருட்சங்களின்
ஆயுள்
குறுகித்தான் போனது
சொகுசு வாழ்க்கை
பழகிவிட்ட மானிடர்க்கு
இயற்கை வரமாய்
வேரூன்றிவிட்ட நீ
இனியும் தேவைப்படவில்லை
வானளாவி நின்ற
உன்னை
அவர்கள் வெட்டிச் சாய்த்தபோது
உன் சகாப்தம்
முடிந்ததென்றே எண்ணினர்
ஆனாலும்
அழியாச் சுவடுகளாய்
ஆழப் பதிந்துவிட்ட
உன் வேர்கள்
என்றும் உன் கதை பேசும் !
12 comments:
பிருந்தா... அருமையான ஒரு படைப்பு. மேலும் உங்கள் ஆக்கங்களை எதிர்பார்த்துள்ளேன் :)
brins, நல்லா இருக்கு... keep it up.
தங்கள் பின்னூட்டலுக்கு மிக்க நன்றி ஆரபி :)
நன்றி anns !
its a pleasure to read ur blog! i feel like spring :)
too good bru! keep it up!
thanks a bunch 4 ur comment bahi !
மனிதன் அப்பாவியாய் இருந்த போது அளவளாவி ஆதரவளித்த (வ)மரங்களை வெட்டி வீழ்த்தும் சுயநல உலகம்...
அழகான சொற்பதங்களிடையே அழுத்தமான கருத்துக்கள்...
தொடர்ந்தும் எழுதுங்கள்...
தங்கள் பின்னூட்டலுக்கு மிக்க நன்றி Thinks Why Not-Wonders How !
இங்கே இதுக்காக சில கட்சியே இருக்கு, என்னத்த சொல்ல?
மனிதன் என்றேனும் ஒர் நாள் திருந்திடுவான் என்ற நம்பிக்கையுடன் காத்திருப்போம்...
கருத்துக்களுக்கு மிக்க நன்றி.
ஆகச்சிறந்த சிந்தனைகள்...!
நன்றி வசந்த் :)
Post a Comment